இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்க இன்று 3 பேர் குறித்த தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
முன்பதாக கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று காலை ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் இன்று பிற்பகல் வெளை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியாவாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கம்!
வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள காலக்கேடு!
டெல்லியின் வணிக வளாக தீ விபத்து - 27 பேர் பலி ; 40 பேர் படுகாயம்!
|
|