இலங்கையில் ஒரே நாளில் 7 பேருக்கு கோரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவுகள் இல்லை என தெரிவிப்பு!

Saturday, April 11th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் நீர்கொழும்பு, சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் குறித்த நோய் தாக்கத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நேற்றிரவு புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் குறித்த சாரதியுடன் நெருங்கி செயற்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உறுதி செய்த கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 28 பேரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். எனினும் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் பிரதேசங்கள் முழுவதும் போதை பொருள் தேடி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் வைத்து குறித்த 28 பேரையும் கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்கள் 28 பேரும் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  அவர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நேற்றையதினம் இனங்காணப்பட்ட 7 ஆவது நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனகிடையே கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் அத்துடன் 270க்கும் அதிகமானோர் வைத்தியகண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: