இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்!  உளவுப் பிரிவினர் தயார் நிலையில்!!

Thursday, July 14th, 2016

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய ஊடகம் ஒன்றில்  வெளியான செய்தியில்  ஐ.எஸ். அமைப்பில்  இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் இலங்கையில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே  இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீரவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ் விடயம் தொடர்பில் விரிவாக எதனையும் கூறமுடியாது. அதேவேளை எமது உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எனவே எதற்கும் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

Related posts: