இலங்கையில் இன்று  கடும் காற்றுடன் கூடிய காலநிலை!

Thursday, June 16th, 2016

நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமெனவும்  நாட்டின் தென் பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியும்மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிளும் மழைப் பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: