இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கட்டுப்படுத்துவதற்கான விஷேட செயலணி சுகாதார அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

Wednesday, April 22nd, 2020

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இன்றையதினம் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 104 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸினை கட்டுபடத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டள்ள சிறப்பு செயல்திறன் சீராய்வுக்குழுவின் கூட்டம் இன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது புதிதாக இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை பலப்படுத்துவது, ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போக்குவரத்து சேவையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதும் கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த வேவையான அனைத்து விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பினபற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுகாதார தரப்பினரால் தனிமைப் படுத்தப்பட்டனர்

அவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டவர்களே இன்றையதினம் பலாலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார தரப்பினர் தெரஜிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: