இலங்கையிலும் சிங்கப்பூர் தரத்திலான மருத்துவமனை!

Friday, April 1st, 2016

எமது நாட்டு மக்களின் நன்மை கருதி சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலைகளின் தரத்தில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவ்வாறு  3 வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வைத்தியசாலை அமைப்பதற்குப் பொருத்தமான காணியும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நிர்மாணிப்பதற்கு ஜேர்மன் உடன்பாடு தெரிவித்துள்ளதுடன் ஒஸ்ட்ரியா ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இதற்கான திட்டங்களை கையளித்துள்ளதாகவும் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

அண்மையில் இருதயத்திற்கு குருதியை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பிற்காக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றிலேயே  அமைச்சர் ராஜித சேனாரத்தின  சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: