இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, September 25th, 2023

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்குள் மேலும் 4 நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முட்டை உற்பத்தி அதிகரித்து, நாட்டில் முட்டையின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: