இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உறுதியளிப்பு!

Friday, March 24th, 2023

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவுமென அந்தநாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள்ளார்.

அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் தென் ஆபிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவிடமே அமைச்சர் நலேடி பாண்டோர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களை சந்திக்கும் நோக்கில் இலங்கையின் பிரதிநிதிகள் குழு தென் ஆபிரிக்கா சென்றுள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இந்த விடயத்தில் கூடிய அறிவைக் கொண்ட தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: