இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, May 13th, 2020

இலங்கைப் பிரைஜைகள் அனைவருக்கும் நவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதனடிப்படையில் அனைத்து குடிமக்களின் தரவுகளையும் வாழ் நாளில் ஒரு முறை மாத்திரம் பெற்று வெளியிட எதிர்பார்க்கும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையினை வழங்குவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவை இணையம் ஊடாக பார்ப்பதற்கான அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அடையாள அட்டையில், மிகவும் துல்லியமான தரவுகள் உள்ளடக்கப்படுவதுடன், பல்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் இந்த அடையாள அட்டையல் உள்ளடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப் பயணம் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பெறுதல் முதல் ஓய்வூதியங்கள், சமுர்த்தி சலுகைகள், வருமான வரி மற்றும் வாக்களிப்பு என பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படும்.

சமகால ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையின் அத்தியாவசியத்தை தெரியப்படுத்தினார். அதன் ஆரம்ப திட்டமிடல் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய அடையாள நிபுணர்களின் குழுவின் கீழ், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முழு வழிகாட்டுதலுடன் மற்றும் ஜனாதிபதி பணிக்குழுவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து மக்களுக்கும் புதிய அடையாள அட்டையை விரைவில் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுமாறும் ஜனாதிபதி துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: