இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

Monday, November 20th, 2017

அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமைக்கான தகுதியை பெறாது முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண பையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதில் அளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது கைது செய்யப்பட்ட நபர்கள் முகாம்களில் இருந்து வருகின்றனர்.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாமில் இருந்து 12 இலங்கையர்கள் பப்புவா நியூகினியாவுக்கும் 21 பேர் அவுஸ்திரேலியாவில் உள்ள மத்திய பிரதேசத்திற்கும், 70 பேர் நவூரில் முகாமுக்கும், 94 பேர் முகாமிலும் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை மீண்டும் திருப்பி அழைப்பதற்கான தேவையான விமான சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: