இலங்கையரின் தகவல்கள் பாதுகாக்கப்படும் : வைபர் செயலி நிறுவனம்!
Friday, May 11th, 2018இலங்கைப் பயனர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைபர் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியது.
தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டது. இணையத்தில் பல்வேறு தகவல் கசிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.
இலங்கையில் எட்டு மில்லியன் பயனர்கள் வைபர் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். வைபர் மிகவும் பாதுகாப்பான ஓர் தொடர்பாடல் முறைமை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
Related posts:
பொது இடங்களில் புர்கா அணிவதை தவிருங்கள் - அகில இலங்கை உலமா சபை!
பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!
அதிக சம்பளத்துடன் 4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
|
|