இலங்கைத் தீவை அச்சுறுத்துகின்றது கொரோனா – ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! (கொரோனா தொடர்பில் ஒரு தொகுப்பு)

Friday, April 3rd, 2020

நாட்டின்  தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்டபிரகாரம் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், ஒரு சிலராலும் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். அத்துடன் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே தனது உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தாம் வெளியிடுவதாக ஜனாதிபதி தெளிவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைப்பினால் அறிக்கைகள் வெளியிடப்பட்டுவரும் இந்நிலையில் இன்று ஊடகவியலாளர்களுக்கும் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் –

01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும்.

02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம்.

03.வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம்.

04.எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம்.

05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.

06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை “தெளிவின்மைப்படுத்தி” பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.

07.மக்கள் மத்தியில் வைரஸ் பரவும் என்பதை போன்று செய்தி அறிக்கையிடலை தவிர்க்கவும்.

08.கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு செல்லும் நிலையில் நேற்றையதினம் குறித்த நோய் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்பெற்றுவந்த நான்காவது நபரும் பலியானார்.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இதனிடையே யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனோ வைரஸ் அறிகுறி சந்தேகத்தில் நேற்று 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை எனபது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்றுநோய் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சவுதி அரேபியாவின் மெக்கா பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் சவுதிக்குள் 1885 கொரோனா நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு 21 பேர் இறந்துள்ள நிலையில் சவுதி அரசு வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் எனும் சட்டத்தையும் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றின் காரணமாதக சோமாலியாவில் செல்வாக்கு மிக்க தலைவராகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நூர் ஹசன் ஹுசைன், இலண்டனில் பலியாகியுள்ளார்.

மேலும் குறித்த கொரோனா தாக்கத்துக்கு இலக்காகி லெபனானுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் பெர்னார்டிடா கேடல்லாவும் இறந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

அத்துடன் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் ஈரானின் மிக உயர்ந்த இராஜதந்திரியுமான அலி லரிஜானி, கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் தற்போது சுய தனிமை சிகிச்சைக்கு உட்படுத்துப்பட்டுள்ளார்

கடந்த 24 மணி நேரத்தில், ஸ்பெயினில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 950 பேர் இறந்துள்ளனர், இதையடுத்து அந்நாட்டில் இந்நோய் காரணமாக இதுவரை 10,003 பேர் பலியாகியுள்னளனர்.

இதனிடையே மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிஜ செய்யப்பட்டுள்ள நிலையில்  பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2069 பேர் எனவும் இவர்களுள் இதுவரை  53 பேர் இறந்துள்ளனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலைவயில் இலங்கையில் குறித்த கொரோனா தொற்று காரணமாக இதுவரை 4 பேர் பலியாகியுள்ள நிலையில் 22 பேர் பூரண நலமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். அத்துடன் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 151 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ள நிலையில்

126 பேர் குறித்த நோயின் தாக்கம் காரணமாக தீவிர 251 பேர் கொரோனா வைரஸ் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் வைத்தியசாலைகளில் தங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்புடைய 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொமரூஸ் கிரிபதி, லெசதோ, மலாவி, மாஷல் தீவு, மைக்ரோசியா, நாவுரு, வடகொரியா, பலாவு, சேமோவா, வனவாடு, யேமன், சாஹோ தோமோ, பிரின்சிபே, சொலமன் தீவுகள், தென் சூடான், தாஜிகிஸ்தான், டொங்கா, தர்கிமேனிஸ்தான், துவாலு போன்ற நாடுகளில் இன்றையதினம்வரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வடகொரியா தொடர்பான புள்ளிவிபரங்களில் சிக்கல்கள் இருப்பதாக விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: