இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

Tuesday, August 24th, 2021

இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: