இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது அமெரிக்கா!

Thursday, June 21st, 2018

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கேசப் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரை சந்தித்த வேளை இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, அதுல் கேசப் இலங்கை அதிகாரியை சந்தித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அமெரிக்கா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஆலயம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அமெரிக்காவின் இணை அனுசரணையில் 2015ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டு இரண்டு யோசனைகளை ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவில் முன்வைத்தது.

அதில் அடங்கும் விடயங்களை நிறைவேற்றி கொள்வதற்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: