இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு  – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, October 14th, 2016

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைசார் மறுசீரமைப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவில் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ள  டுங்-லாய் மார்கியூ  தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவர்  டுங்-லாய் மார்கியூ  தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், நல்லிணக்கம், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த புதிய தூதுவர் ஒத்துழைப்பு வழங்குவார் என இதன் போது ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

sri-lanka-EU-flags-720x480

Related posts: