இலங்கைக்கு பல பில்லியன் ரூபா நட்டம்!

Monday, May 8th, 2017

தயாரிப்புகளின் பெறுமதியை குறைவாக காண்பித்து இலங்கைக்கு மோசடியான முறையில் கொண்டு வரப்பட்ட 1500 அதி சொகுசு வாகனங்களால் பெருந்தொகை வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 1500 அதி சொகுசு வாகனங்கள்  இவ்வாறாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பல பில்லியன் ரூபா தீர்வை வரி மோசடி செய்யப்பட்டுளளதாக சுங்க பிரிவின் உயர் அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூறப்படும் இந்த மோசடி, அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடிக்காக ஜெர்மனியில் குறித்த வாகனம் தயாரிக்கும் நிறுவனத்திடம் நேரடியாக இறக்குமதி செய்யாமல், பிறிதொரு நிறுவனத்தில் பெயரில் வாகனத்தின் உண்மையான பெறுமதியை விடவும் குறைவாக குறிப்பிட்டு குறித்த வாகனங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்களின் தீர்வை வரி சலுகையின் கீழ் இந்த வாகனங்கள் கொண்டு வந்துள்ள போதிலும், அரச சேவை இந்த வாகனம் கொண்டுவருவதற்கு சம்பந்தப்படவில்லை. இது தொடர்பில் சுங்க பிரிவு ரீதியில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: