இலங்கைக்கு எதிராக சதி செய்வோருக்கு பாரிய தோல்வி – ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிப்பு!
Tuesday, August 11th, 2020இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன் என்று கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ள ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
2021 மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் குறித்த தீர்மானம் மீண்டும் முன்வைக்கப்படும். எனினும் அங்கு நாங்கள் புதிய அரசாங்கத்தின் ஆதரவோடு தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்திற்கு மக்கள் ஒப்புதல் அளித்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.
இது ஐ.நாவின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா மற்றும் இலங்கைக்கு எதிராக சதி செய்யும் புலிகள் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான தோல்வியாகும் என்றும் சரத் வீரசேகர கூறினார்.
Related posts:
|
|