இலங்கைக்கு உதவுமாறு பல நாடுகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பரிந்துரை – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களிடம் இலங்கைக்கு உதவி செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் கோரவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தன்னுடனான சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைக் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் பெற்ற வெற்றியே, இதற்கான காரணம் எனத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

இந்தியாவின் தலைமைத்துவம், இலங்கைக்கு தற்போது பாரிய சக்தியாக உள்ளது. நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியாக வழங்கியுள்ளது.

நிதி உதவி மாத்திரமன்றி, இதயபூர்வமான நட்புடனும் உள்ளார்கள். இதனால், பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் போது, நாம் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.. 

Related posts: