இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!

Wednesday, March 2nd, 2022

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதுவருக்கு, உயர்ஸ்தானிகரால் இந்திய இல்லத்தில் வரவேற்பளிக்கப்பட்டதாக. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தமது நற்சான்றுகளை கையளித்தமைக்காக அமெரிக்க தூதுவரைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வெற்றிகரமான பதவிக்காலம் அமையப்பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மகா சிவராத்திரி விரதமான நேற்றைய நாளில், அமெரிக்க தூதுவர், கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: