இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விஷேட சந்திப்பு!

Saturday, October 24th, 2020

மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹாடாட் – சேர்வோஸ், இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் திருமதி. சியோ கண்டா ஆகியோர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்யே பேராசிரியர் டபிள்யு.டி லக்ஸ்மனை மரியாதை நிமிர்த்தம் சந்திப்பை மேதற்கொண்டுள்ளனர்.

இதன்போது அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்கள் உற்பத்தி மற்றும் புத்தாக்க இயலளவினை உறுதிப்படுத்துவதற்கு இயலச் செய்து, அதனூடாக அத்தகைய நாடுகளின் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கு பல்புடை நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் ஆதரவுகளினை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தினை ஆளுநர் லக்ஸ்மன் வலியுறுத்தியிருந்தார்.

இதன்போது கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களில் இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு தற்போது மற்றும் எதிர்கால உலக வங்கியின் ஆதரவு பற்றி, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார துறைகள், அதே போன்று சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளின் முறைசாரா துறை பற்றியும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: