இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

Monday, October 25th, 2021

முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர் செயலகத்தினூடாக இதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாவட்ட COVID ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், பொது சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய முன்பள்ளிகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்பள்ளிகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பள்ளிகளுக்கு உடல் வெப்பமானி, தொற்று நீக்கும் திரவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள...
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜ...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவ...