இறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!

சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாசிப்பு மூலம் சர்வதேச அறிவை வளப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊக்குவிப்புக்களை வழங்குகின்றது.
அதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த பாதீட்டின் மூலம் எமக்கு கிடைத்துள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கான வரியினை குறைத்து, வரிவிதிப்பை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊர்காவற்றுறையில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஈழமக்கள் ...
அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் - யாழ் ...
|
|