இரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்!

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகிக்கும் அரச நிர்வாக இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவி அரச நிர்வாக, இடர் முகாமைத்துவம் மற்றும் பண்ணை வள அபிவிருத்தி அமைச்சு பதவி என்பதாக திருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் பீ.ஹரிசன் வகிக்கும் விவசாய, பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியாக திருத்தப்பட்டுள்ளது.
இவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Related posts:
இலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்!
உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் - முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!
|
|