இருதய சத்திர சிகிச்சைக்கான இயந்திரங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Wednesday, April 3rd, 2019

சிறுவர்களின் இருதய சத்திர சிகிச்சைக்கு தேவையான 15 சிகிச்சை இயந்திரங்கள் நைற்றிக் ஒக்சைட் சிலிண்டர்களை விரைவாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை காசல்ற்றி மகளிர் வைத்தியசாலை உள்ளிட்ட 17 வைத்தியசாலைகளில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளன.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சுவாசப்பை செயற்பாடுகளுக்கு நைற்றிக் ஒக்சைட் தேவை என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சுகாரதார அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 1000 சிறுவர்கள் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts: