இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி!

Saturday, November 5th, 2022

இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் குடும்பத் தலைவரை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.

திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், 55 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் தைக்கும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான தனியான இடம் ஒன்றையும் வழங்கியது.

இந்த நிகழ்வில், குறித்த படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வல...
பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் - வெளிநாட்டு அலுவல்கள...