இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Monday, July 5th, 2021

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தற்போது நோயாளர்கள் குறைவாக பதிவாகுவதால், ஆபத்து இல்லை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது.

தொடர்ந்தும் ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் வரையில் நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், டெல்டா திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் எதிர்காலத்தில் வேறு திரிபுகளும் ஏற்படலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: