இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

Sunday, November 28th, 2021

இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று (28) அதிகாலை 6 மணிக்கு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கும், இரண்டு வான்கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: