இயற்கை அனர்த்தங்களால் வருடாந்நம் 380 மில்லியன் டொலர் இலங்கைக்கு இழப்பு!

Tuesday, July 4th, 2017

இலங்கை இயற்கை அனர்த்தங்களின் காரணமாக வருடாந்தம் சராசரியாக 380 மில்லியன் டொலர்களை இழப்பதாக உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த அபாய மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மூலம் இவ்வாறு 572 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இழப்புகள் ஏற்பட்டதாக மேலும் இந்த ஆண்டில் அண்மையில் ஏற்பட்டதாக இயற்கை அனர்த்தங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த இழப்புக் கணிப்பீடுகளுக்கு ஏற்ப, கடந்த ஜீன் வரையில் மட்டும் சமார் 250 மில்லியன் டொலர் பெறுமதியான இழப்புகள் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அதன் இயற்கை அனர்த்த அபாய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 20 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் மட்டும் வருடாந்ம் சராசரியாக 380 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட இழப்பை இலங்கை அடைந்து வருவமாக உலக வங்கியின் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: