இயந்திரம் செயலிழப்பு – நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!

Monday, March 18th, 2019

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் இரண்டாவது உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பிற்பகல் செயலிழந்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டமைப்பின் இருப்பு நிலையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: