இப்படிச் செய்தாரா அமைச்சர் சஜித்தின் அப்பா?

Monday, August 19th, 2019

அப்பாவின் அரசியலை தொடரப்போவதாக சஜித் பிரேமதாசா கூறுகிறார். அப்படியானால் அப்பா செய்தது என்ன? என கேள்வி எழுந்துள்ளது.

அப்பாதான் புலிகளுக்கு 1980களில் ஆயுதம் வளங்கினார். அந்த ஆயுதங்களாலே எமது இராணுவம் தாக்கப்பட்டது. கொக்காவிலை புலிகள் கைப்பற்றினர், மாங்குளம் கைப்பற்றப்பட்டது.

அலிமங்கடையை புலி பயங்கரவாதிகள் சுற்றி வளைத்தனர், யாழ் கோட்டையை கைப்பற்றினர். எனவே அப்பா செய்ததை மகன் செய்யப்போவதாக கூறுவது அச்சம் நிறைந்த ஒன்றாகும்.

அதேபோன்று 1990களில் 600 பொலிஸாரை பயங்கரவாத புலிகளிடம் சரணடையுமாறு அப்பா சென்னார். சரணடைந்த அனைவரையும் புலிகள் சுட்டுக் கொலை செய்தனர்.

இதுதான் அவருடைய அப்பா செய்த அரசியல் இதனையே அவர் தொடரப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். இதற்கு மக்கள் பலியாகிவிட கூடாது.

இந்த நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா அல்லது வீடுகட்டுபவரா இந்த நாட்டை ஆளவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

Related posts: