இன்று முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்!

நடைமுறைக்கு வரும் வகையில் இன்று முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கான தர நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் விற்பனை மற்றும் கொள்வனவு ஆகியவை குறித்த தரநிலைக்கு உட்பட்ட வகையில் அமைய வேண்டும் என்றும் குறித்த சபையின் செயலாளர் நாயகம் தமித அனுகுல தெரிவித்திருந்தார்.
மின்சார விபத்துக்களை குறைக்க குறித்த தர நிலைப்படுத்தப்பட்ட மின் பிளக்குகள் மற்றும் துளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருப்பினும் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளை அகற்ற வேண்டிய அவசியங்கள் இல்லை என்றும் அவற்றின் பாவனைக் காலத்திற்கு பின்னர் புதிய தரநிலைப்படுத்தப்பட்ட மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளை பாவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
|
|