இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு!

Friday, July 26th, 2019

ஏப்ரல்21 தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.

இன்றையதினம் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் காலை 9 மணிக்கு சாட்சிபதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். சட்ட மா அதிபர் டப்புலா டி லிவேராவும் இன்று தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க உள்ளார்.

மத்திய வங்கியின் மேலும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுத் தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர். லதீஃப் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லால் பெரேரா முன்னாள் காவற்துறை மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் நேற்று சாட்சி அளித்திருந்தனர்.

மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே மற்றும் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்தா விதானகே ஆகியோரும் நேற்று சாட்சி வழங்கி இருந்தனர்.

நேற்றைய சாட்சி வழங்கலின் போது ஏப்ரல் 21 தாக்குல் இடம்பெற்றதன் பின்னரே அது குறித்த தகவல்கள் தமக்கு பகிரப்பட்டமை குறித்து ஆச்சரியம் அடைந்ததாக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லதீஃப் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: