இன்று நள்ளிரவு எரிபொருள் விலை குறைப்பு!

Tuesday, August 9th, 2016

எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் மற்றும் எக்ஸ்டா மைல்  டிசல் ஆகிய எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்டா பிரிமியம் யூரோ த்ரி பெற்றோல் தற்போது 121 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன் விலை 2 ரூபாயால் குறைவடைகின்றது.

97 ரூபாய்க்கு விற்கப்படும் எக்ஸ்டா மயில்  டிசல், 2 ரூபாய் குறைப்பட்டு 95 ரூபாய்க்கு விற்கப்படும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்ததையடுத்து, இவ்வாறு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

Related posts: