இன்று உலகத் தாய்மொழி தினம்!

Wednesday, February 21st, 2018

ஒரு இனத்திற்குரிய அடையாளம் மொழி. அந்த இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தமது உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன்விளைவே மொழிகளின் தோற்றம்.

உலகின் மொழிகளைக் காப்பாற்றி அதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறு முயற்சியாக ஐ.நா சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21ஆம் திகதியை உலகத்தாய்மொழி தினமாகக் கொண்டாடி வருகின்றது.

கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக மாற்றக்கோரி 1952ம் ஆண்டு பெப்ரவரி 21ம் நாள் நடத்தப்பட்ட போராட்டத்தின் போதுஉயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாகவே இந்த நாள் உலகளாவிய ரீதியில் மொழி தொடர்பாக நினைவுகூறப்படுகின்றது.

அத்தோடு, வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமானயுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 30 ஆவது அமர்விலேயே, பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலானஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை 1999ம் ஆண்டு அனைத்துலக தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: