இன்று ஆரம்பமாகும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு!

ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று தாய்லாந்தில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள உள்ளார்.
. 34 நாடுகளின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெற உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, உணவு பாதுகாப்பு, நீர் மற்றும் மின்சக்தி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட 20 விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
Related posts:
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!
வெளிநாடு செல்ல வேண்டாம் - சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ...
|
|