இன்று ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு!

13633379_1107546972653310_700106650_o__1_ Saturday, October 7th, 2017

சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள குறித்த இந்த மாநாடு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த இந்த அமைப்பில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.