இன்று அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில்!

Thursday, February 9th, 2017

சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் உயர்ந்துள்ள விலையை மட்டுப்படுத்துவதற்கும் நேற்று (08) நள்ளிரவு முதல் அரிசி விற்பனைக்கான அதிக பட்ச விற்பனை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 72 ரூபாவாகவும், பச்சை அரிசி 70 ரூபாவாகவும் சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Rice-3-Varieties

Related posts: