இன்றும் அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Saturday, August 10th, 2019


நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் இன்றும் தினம் அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் வேகமான காற்று வீசும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.