இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறை!

Friday, April 20th, 2018

இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.அதற்காக 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


இந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை
வடக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிப்பு!
சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தை விரிவுபடுத்த உலகவங்கி கடனுதவி!
இந்தியமீனவர்களின் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளால் வடபகுதிகடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்பு.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!