இன்றுமுதல் நேர அட்டவணைக்கு அமைவாக புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Thursday, December 14th, 2017

இன்று அதிகாலை தொடக்கம் வழமையான நேரஅட்டவணைக்கு அமைவாக ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வந்த ரயில் ஊழியர்களின் வேலைப்பகிஷ்கரிப்பு தொடர்பாக அமைச்சரவை துணைக்குழுவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலைப்பகிஷ்கரிப்பை கைவிடத்தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். அடுத்த வாரத்தில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவும் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: