இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது – சிறைச்சாலை நிர்வாகம்!

Wednesday, March 18th, 2020

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை முதல் இரு வாரங்களுக்கு சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிட பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளது

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்றுமுதல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பார்வையாளர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: