இன்றுமுதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று 17 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 3 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படு என்றும் அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: