இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 29th, 2023

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளையை பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி, வரும் 30 ஆம் திகதிக்குள் தென்கிழக்கு வங்கக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் இது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பு குறித்து தெற்கு அந்தமான் முகத்துவாரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இயக்கப்படும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: