இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நோக்கில் தேசிய நல்லிணக்க வாரம்!

Tuesday, December 26th, 2017

எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன்கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல் மக்களிடையே சாந்தி  சமாதானம் அன்பு கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை விருத்தி செய்தல் பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்தல் என்பனவாகும்.

Related posts: