இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை – டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கூட்டாக தகவல்!

வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையுமில்லை என ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முன்பதாக ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் விசேட ஸ்பைவெயார் ஒன்றை நிறுவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதையடுத்தே பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தமது நிறுவனங்களை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டதில்லை எனவும் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் இலங்கை தொலைதொடர்பு சட்டங்களுக்கு அமையவே செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|