இந்திய வெளியுறவு செயலாளர் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஆதரவை வழங்க தயார் எனவும் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, நிதி அமைச்சர் பசில் ராஜபக் சவை சந்தித்துள்ளனர்.

நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில்உலக நிலையை எதிர்கொள்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பிராந்திய ஜாம்பவானாகவும், அயல் நாடென்ற வகையிலும் இந்தியா – இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.. பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட்டு இந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவை வழங்க தயார் என இந்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக சமூகத்தினருக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: