இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Thursday, January 13th, 2022
நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
குறித்த மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் - றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!
ஜனாதிபதி யோசனை - பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!
உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் சேவையை வழங்குவதில்லை - செயற்பாடுகளுக்காக அரசாங்...
|
|
|


