இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி – வர்ததக அமைச்சு அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும்

ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!
5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை சவுதி அரேபியாவிடம் இருந்து பெற்றுக்கொள்...
காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...