இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை – எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Saturday, April 23rd, 2022இந்தியாவைனால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன.
மேலும் இந்தோனேஷிய அரசாங்கத்தின் 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடையும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
அவர்களிடம் இருந்து 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த மருந்துப் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெறவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 186 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 19.02 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக 148 அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
000
Related posts:
|
|