இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!

Thursday, August 16th, 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

உடல் நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் தில்லியில் கூடி முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறது.வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.

Related posts:


டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமைக்கு - பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் ...
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...